Posts

      அறியாத பாரதி இராஜ முத்திருளாண்டி     தமிழகத்தின் தென்பரப்பிலுள்ள ஒரு சிற்றூரான எட்டையபுரத்திலே  பிறந்து, ஆக்க நெருப்பாய்க் கிளம்பி, ‘மகாகவி’, ‘தேசியக் கவி’, ’தமிழ் நவயுகத்தின் வெள்ளி முளைப்பு’, ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சியின் மூலபுருஷர்’, ’தமிழிலக்கியத் துறைகள் தோறும் புதுமைகள் வடித்த இலக்கியச் சிற்பி’ என எண்ணற்ற சிறப்புகளுக்கு உரியவனாக விகசித்து நிற்கும் பாரதி மறைந்து (1921) நாறாண்டுகள் கழிந்துவிட்டன. “பார் மீது நான் சாகாதிருப்பேன் “ (பாரதி- அறுபத்தாறு -6  ) எனப் பெருமலையன்ன அசையா நம்பிக்கையுடன் தன் வரலாறு பாடியஒரே கவிஞன் பாரதி. தான் மறைவடைய ஒரு மாதத்திற்கு முன்புகூட (ஆகஸ்ட்1921) , ஈரோடு கருங்கல்பாளையத்தில் ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்றே இறுதியாகவும் உறுதிப் பிரகடனம் செய்து விட்டு வந்தான். ஆனால், மெல்ல வந்து- 1921 செப்டம்பர் 11 நள்ளிரவுகடந்து- மரணம் அவனைக் கவர்ந்து சென்றுவிட்டது. இருப்பினும் “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்ற பாவேந்தரின் நம்பிக்கை முழக்கத்திற்கேற்ப, மறைந்து நூறாண்டுகள் கழிந்தும் புகழுருவாகத் தமிழ்கூறும் உலகெலாம் வளர்ந்துகொண்டே இருக்கும் விந்தை
வீரமாமுனிவர் வரலாறு: வளர்ந்து நிலவும் குழப்பங்கள் இராஜ முத்திருளாண்டி https://bit.ly/3e0YyNG ** வீரமாமுனிவர் வரலாறு: வளர்ந்து நிலவும் குழப்பங்கள்   இராஜ முத்திருளாண்டி *       தமிழ்ப் பரப்பில் வீரமாமுனிவரென நாமறிந்துவரும் (Constanzo Gioseffo Eusebio [1] - தமிழில், கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என வழங்கப்படும்) பெஸ்கி அவர்கள், இத்தாலி நாட்டில் , நவம்பர் 8, 1680 இல் பிறந்தவர். இளமையிலேயே இயேசு சபை ஊழியம் செய்யப் பெரிதும் விரும்பி, ரோம் நகரில் உரிய போதனையும் முறையான பயிற்சியும் பெற்ற பின்னர் இடர்மிகு கடற் பயணம் மேற்கொண்டு இந்தியா (கோவா) வந்து சேர்ந்து தமிழகம்   அடைந்தவர்.   மதுரை திருச்சபை யில்   ஒன்றி, ‘தைரியநாத சாமி’ யாக   , இயேசு சபை ஊழியம் தொடங்கிக் கால் கொண்டு நின்று -   சமய ஊழியத்தோடு அளப்பரிய தமிழ்த்தொண்டும் ஆற்றி - இன்றளவும் நினைந்து போற்றப்படுகிறவர். இருப்பினும், அவரது வரலாற்றுத் தகவல்களில் இன்றுவரை பல குழப்பங்கள் வளர்ந்து தொடர்கின்றன.   இத்தாலியில் பிறந்த பெஸ்கி அவர்களின் பிறந்த ஆண்டு (1680) விவரங்குறித்து மாறுபாடான செய்திகள் இதுவரை இல்லை. ஆனால், தான் விரும்
தமிழ்ச் சிறுகதை வரல் ஆறு.   நதிமூலம்-1   இராஜ முத்திருளாண்டி.       கதா மஞ்சரி   கதா மஞ்சரி   என்ற தலைப்பில் சென்னைக் கல்விச் சங்கத் தமிழ் தலைமைப் புலமை நடாத்தும் தாண்டவராய முதலியாரால்   தொகுத்து, சாலிவாகன சகாப்தம்   சக வருடம் ( 1827 ஆம் ஆண்டு ) பதிப்பித்த   நூலில்,   பாயிரமாகக்   கீழ்க்கண்டவாறு   பதிவிடப்பட்டுள்ளது.     மஹா ராஜ ராஜ ஸ்ரீ -   ரிச்சார்ட் கிளார்க்குத் துரையவர்கள் சென்னைக் கல்விச் சங்கத்திற் றலைவராக யிருந்த     காலத்தில்-   தமிழ் படிப்போர்-   தொடக்கத்திற்     படிக்கத் தக்கதோர்   கதை     திரட்டுவாய் என்றேவ , மேற்கொண்டு சில கதைகளைச் சந்தி பிரித்தும் புணர்த்தும் - பல கதைகளை யிவ்வாறின்றி யேற்றவாறு சிலவிடத்துச்   சந்தி புணராமலும் பலவிடத்துப் புணர்த்துங் கதா மஞ்சரி யெனும் பெயர்தந்திவ்வாறிக்கதை தாண்டவராய முதலியாராற் றொகுக்கப்பட்டது.     ‘   தொடக்கத்தில் தமிழ்   படிப்பவர்க்கு   உதவி செய்வதற்காக’ எழுதப்படும் கதை என்பதால் முதலில்   மிகச்சிறு கதையாக பிரித்தல், கூட்டல் என்று இரு பகுதிகளாக கீழ்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளது.   கதாமஞ்சரி யின் நோக்கம் ,   ‘