முதல் தமிழ் நாவல் ஆதியூர் அவதானி சரிதம் I மாயூரம் வேதநாயகம் பிள்ளை உரைநடையில் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவல்தான் தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்று இதுவரை கருதி வந்திருக்கிறோம். அது வெளிவந்தது 1879 ஆண்டு. அதற்கு நான்கு ஆண்டுகள் முன்பே சென்னை புரசைவாக்கம் வித்துவான் சேஷையங்கார் என்ற பேராசிரியர் 1875 இல் எழுதிய ஆதியூர் அவதானி சரிதம் வெளிவந்து விட்டது. அம்மானை என்ற இலகுவான பாடல் வடிவத்தை சென்னை புரசைவாக்கம் வித்துவான் சேஷையங்கார் என்ற பேராசிரியர் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ( 1875) இந்துக்களுக்குள் காணப்படும் குணா குணங்களையும், நடைகளையும் வருணித்து நாவல் என்ற பெயர் கொடுத்து "ஆதியூர் அவதானி சரிதம்" என்ற தலைப்புடன் எழுதி வெளியிட்டார். நாவல் என்ற இலக்கிய வடிவம் உரைநடையில்தான் இருக்கவேண்டும் என்பது இதுவரை ஒப்புக்கொள்ளப்பட்டுவர...
Posts
Showing posts from February, 2022