வீரமாமுனிவர் வரலாறு: வளர்ந்து நிலவும் குழப்பங்கள் இராஜ முத்திருளாண்டி https://bit.ly/3e0YyNG ** வீரமாமுனிவர் வரலாறு: வளர்ந்து நிலவும் குழப்பங்கள் இராஜ முத்திருளாண்டி * தமிழ்ப் பரப்பில் வீரமாமுனிவரென நாமறிந்துவரும் (Constanzo Gioseffo Eusebio [1] - தமிழில், கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என வழங்கப்படும்) பெஸ்கி அவர்கள், இத்தாலி நாட்டில் , நவம்பர் 8, 1680 இல் பிறந்தவர். இளமையிலேயே இயேசு சபை ஊழியம் செய்யப் பெரிதும் விரும்பி, ரோம் நகரில் உரிய போதனையும் முறையான பயிற்சியும் பெற்ற பின்னர் இடர்மிகு கடற் பயணம் மேற்கொண்டு இந்தியா (கோவா) வந்து சேர்ந்து தமிழகம் அடைந்தவர். மதுரை திருச்சபை யில் ஒன்றி, ‘தைரியநாத சாமி’ யாக , இயேசு சபை ஊழியம் தொடங்கிக் கால் கொண்டு நின்று - சமய ஊழியத்தோடு அளப்பரிய தமிழ்த்தொண்டும் ஆற்றி - இன்றளவும் நினைந்து போற்றப்படுகிறவர். இருப்பினும், அவரது வரலாற்றுத் தகவல்களில் இன்றுவரை பல குழப்பங்கள் வளர்ந்து தொடர்கின்றன. இத்தாலியில் பிறந்த பெஸ்கி அவர்களின் பிறந்த ஆண்டு (1680) விவரங்குறித்து மாற...
Posts
Showing posts from August, 2022