Posts

Showing posts from June, 2022
  ஸங்கல்பமும் ஸம்பவமும்   EXPECTATION AND THE EVENT   அம்மணி அம்மாள் AMMANI AMMAL     விவேக போதினி மார்ச் 1913 [ பக்கம் 351 முதல் 353 வரை.]   (ஆவண மூலம் தேடிக் கண்டு, நகலில் இருந்து படித்துக் கணினி அச்சு செய்து தமிழ்கூறும் நல்லுலகிற்களிப்பது   பேராசிரியர் இராஜ முத்திருளாண்டி. profrajamuthu@gmail.com     **   ஸங்கல்பமும் ஸம்பவமும்   EXPECTATION AND THE EVENT     ஒரு காலத்தில் ஒரு காட்டில் ஒரு சவுக்கமரமிருந்தது. அது வெகு ஸுகமாக வளர்ந்து கொண்டிருந்தது. போதுமான அளவு மழை சூரிய வெப்பம் முதலிவற்றால்   அது நன்றாய் செழித்து வளர்ந்திருந்தது. அதன் நிழலில் குழந்தைகள் விளையாடிக்கொண்டும் பாட்டுப் பாடி ஆடிக்கொண்டும் குதூஹலமா யிருந்தார்கள். பக்ஷிகள் அதன் கிளைகளில் கூடு கட்டி இனிமையாய் கூவிக் கொண்டிருந்தன. அணில்கள் அங்குமிங்கும் கிளைகளில் தாவி விளையாடிக் கொண்டு பார்ப்பவர்களுக்கு சுறுசுறுப்பை ஊட்டிக்கொண்டிருந்தன.   அந்த மரத்தை சார்ந்துள்ள ஒவ்வொன்றும் ஸந்தோஷத்தோடும் சுறுசுறுப்போடு மிருந்தபோதிலும் அம...