Posts

Showing posts from 2021
Image
  வேப்ப மரம் என் முகப்பு:   1919,சூன் 26 இல் வெளியிடப்பட்ட இக் கதையைத் தேடிக்கண்டு திரு. பெ. தூரன் தமது பாரதி தமிழ் நூலில் முதலில் பதிப்பித்துள்ளார். (பக் 328-335)                                                போதி மரத்தடி புத்தருக்குப் புது ஞானம் வழங்கியது; கவிதைச் சித்தனுக்கு  ஒருவேப்பமரம் நற்கனவு நல்கியதால் இங்கு நமக்கொரு பொற்கதை கிடைத்துள்ளது.   கதை என்ன? தமிழ் தழைக்கப் பொதிகை வந்த குறுமுனி அகத்தியரும், நெல்லைத் தரணி தழைக்கப் பாய்ந்தோடும் தாமிரபரணியும் நீராட்டச் சங்கமம் நிகழ்த்திய களிப்பான கற்பனைக் கனவுக்காட்சி. கண்டது யார்? கவிராஜனா? இல்லை. கரைக்குச் சற்றருகே தோப்பில் நின்ற முப்பது வயது இளமரம், உடலெல்லாம் தமிழ்ச் சொற்கள் உதித்ததொரு ‘ரிஷிபோதம்’ பெற்ற, வேப்ப மரம்.! ஆம். வேப்ப மரம் கனவில் சொன்ன காட்சி விரிகிறது கதையாய் நமக்கு. வேம்பு கசக்கும், ஆனால் தமிழுதிர்க்கும் இந்த வேப்ப மரக்கதை இனிக்கும். ...
    II   வரலாறு ( வரல் + ஆறு, வந்த வழி) அறிவது வேறு; விமர்சனம் / மதிப்பீடு / திறனாய்வு செய்வது வேறு என்பதை நாம் அறிவோம். மிகப் பொதுவாகச் சொல்வதானால் வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசைப் படியான பதிவுகள் எனலாம். குறிப்பிட்ட காலம்வரை, குறிப்பிட்ட காலத்திற்கு   முன்னர் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்து (திரும்பிப்) பார்க்க உதவுவது வரலாறு, என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட உரியது.   ஆனால், தமிழ்ச்சிறுகதை வரலாற்றைப்   பதிவு செய்வதில் ஈடுபட்ட பலர் அவ்வரலாற்றைக் காலவரிசைப்படி முறையாகச் சரியாக, நிரவாமலும், தமிழில் குறிப்பிட்ட காலப் பகுதிகளில் விளைந்த சிறுகதைகளை அல்லது அக்கதைகளின் படைப்பாளிகளை- சரியான மதிப்பீட்டுக் கருவிகள் தம் கைவசமில்லா நிலையில், தத்தமக்குத் தோன்றிவாறு, ஏற்கத்தக்க தரவுகள் சுட்டாமல்- தி/றனாய்வு/விமர்சனம் செய்யவும் முனைப்புக் காட்டியுள்ளனர். வரலாறு வேறு, விமர்சனம் வேறு என்பதை உணர்ந்திருந்தும்,சேராச் சேர்க்கையாக,   வரலாற்றையும் விமர்சனத்தையும் தவறுபட இணைத்து, அவ்வாறு நிகழ்வது ‘தவிர்க்க முடியாததாகும்’ [1] என ஏற்க இயலாத கருத்து நிறுவ...
  முடி அல்லது மடி. Do or Die முடி, இதன் படி. Do as said (here)
குளத்தங்கரை அரசமரம்  குளறுபடி. விவேக_போதினி  செப்டம்பர்1915 விவேகபோதினிஅக்டோபர்1915  ஆகிய இரு இதழ்களில் குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை ஸூ.பாக்யலக்ஷ்மி அம்மாள் என்பவர் பெயரில் வெளிவந்துள்ளதே. தமிழின் முதல் சிறுகதை எனச் சகட்டுமேனிக்குச் சிலாகிக்கப் பட்டுவரும் இக்கதை வ.வே.சு ஐயர் எழுதியதாகச்  சொல்லப்படுகிறதே.எப்படி?  அவரது மனைவி பெயர் என்கிறார்கள்.  சரி, இருந்துவிட்டுப் போகட்டும்..  தன்வாழ்நாளில் எட்டுக்கதைகள் மட்டுமே எழுதிய வ.வே.சு ஐயர்,தன் மனைவி பெயரை  இந்த ஒருகதைக்கு மட்டும்  புனை பெயராகப் பயன்படுத்தினாரா? ஆதாரங்கள் எங்கே?  கேட்க வேண்டியதாகியிருக்கிறதே. *

Accreditation of Institutions offering programmes in Law

Please access my article here: https://www.iiste.org/Journals/index.php/JLPG/article/viewFile/15928/16396

அதிரடி

  அதிரடி அதிரடி  தற்போதெல்லாம் நாளிதழ்களிலும்,  பிற ஊடகங்களிலும் எங்கு பார்த்தாலும், எதற்கெடுத்தாலும்  ஒரே அதிரடியாகத் தான் இருக்கிறது.  மிகச்சாதாரண நிகழ்வு கூட ‘அதிரடி’ என்று அடைமொழி சேர்க்காமல் ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதே இல்லை. ஒரு புள்ளி அசைந்தால் கூட ‘புரட்சி’ என்றும், பெண்ணொருத்தி தன் கூந்தலை அள்ளி முடித்தால் கூட ‘அதிரடி’ என்றும் வார்த்தை சேர்க்காமல் ஊடகத்தாரால் நிகழ்வுகளைச் சொல்ல முடியாது போலிருக்கிறது.  போகிற போக்கை பார்த்தால்,  சமையலறையிலோ அல்லது சாலையோர உணவகத்திலோ ஒரு தோசையைத் திருப்பிப் போட்டால் கூட உடனே  ஓடிப்போய் அந்தத் தோசை, கல்லில் திரும்ப விழுவதற்குள் ‘அதிரடியாக’ என்ற வார்த்தையை அங்கே போடாமல்   ஊடகங்கள் அந்நிகழ்வைச் சொல்லாது. கூடுதலாக, 'அம்மிக் கல்லில் சட்னி அரைக்கும் அதிரடிப்பாட்டி' என்று தலைப்பூச்சூட்டி நாலுகாலம் படச்செய்தியும் பக்கத்தில் போடுவார்கள் ஊடகத்தார்.  சரி, அதிரடி என்றால் என்ன? தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்,  திரு மு சண்முகம் பிள்ளை அவர்களைத் தொகுப்பாசிரியராகவும், பேராசிரியர்கள் அ.ச.ஞானசம்பந்தம், ...

தமிழ்ச் சிறுகதையின் முதல்வர் யார்? முதல் சிறுகதை எது? வரிசை மாற்றம்.

Image
 
Image
 
Image
 
Image
 
Image
 

தமிழ் சிறுகதைகள் வரலாறு: புதிய, திருந்திய பார்வை.

Image