Posts

Showing posts from August, 2021

Accreditation of Institutions offering programmes in Law

Please access my article here: https://www.iiste.org/Journals/index.php/JLPG/article/viewFile/15928/16396

அதிரடி

  அதிரடி அதிரடி  தற்போதெல்லாம் நாளிதழ்களிலும்,  பிற ஊடகங்களிலும் எங்கு பார்த்தாலும், எதற்கெடுத்தாலும்  ஒரே அதிரடியாகத் தான் இருக்கிறது.  மிகச்சாதாரண நிகழ்வு கூட ‘அதிரடி’ என்று அடைமொழி சேர்க்காமல் ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதே இல்லை. ஒரு புள்ளி அசைந்தால் கூட ‘புரட்சி’ என்றும், பெண்ணொருத்தி தன் கூந்தலை அள்ளி முடித்தால் கூட ‘அதிரடி’ என்றும் வார்த்தை சேர்க்காமல் ஊடகத்தாரால் நிகழ்வுகளைச் சொல்ல முடியாது போலிருக்கிறது.  போகிற போக்கை பார்த்தால்,  சமையலறையிலோ அல்லது சாலையோர உணவகத்திலோ ஒரு தோசையைத் திருப்பிப் போட்டால் கூட உடனே  ஓடிப்போய் அந்தத் தோசை, கல்லில் திரும்ப விழுவதற்குள் ‘அதிரடியாக’ என்ற வார்த்தையை அங்கே போடாமல்   ஊடகங்கள் அந்நிகழ்வைச் சொல்லாது. கூடுதலாக, 'அம்மிக் கல்லில் சட்னி அரைக்கும் அதிரடிப்பாட்டி' என்று தலைப்பூச்சூட்டி நாலுகாலம் படச்செய்தியும் பக்கத்தில் போடுவார்கள் ஊடகத்தார்.  சரி, அதிரடி என்றால் என்ன? தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்,  திரு மு சண்முகம் பிள்ளை அவர்களைத் தொகுப்பாசிரியராகவும், பேராசிரியர்கள் அ.ச.ஞானசம்பந்தம், ...