Posts

Showing posts from December, 2025

அறியாத பாரதி - 2: செல்லம்மா, கண்ணம்மாவானது!

Image
அறியாத பாரதி - 2:  செல்லம்மா, கண்ணம்மாவானது! இராஜ முத்திருளாண்டி,  11 டிசம்பர் 2025  “உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறிகாட்டிய புலவன்” எனப் புரட்சிக்கவிஞர் போற்றிய, எட்டையபுரத்துச் சுப்பிரமணிய பாரதி, இந்த பூமிப் பரப்பில், 39 ஆண்டுகளே (11-12-1882 – 11-9-1921) உயிர் வாழ்ந்த கவிச்சூரியன். தன்மீது விடாது படர்ந்து அப்பிக்கொண்டு அகலாது அடர்ந்துகிடந்த  வறுமையினூடே, “நமக்குத்தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’’ என வாட்டும் வறுமையிலும் வதங்காதுகம்பீர முழக்கமிட்ட, கவிராஜன். “என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடவேண்டும்” எனச் செம்மாந்த கடமைப்பொறுப்பறுதி தலையேற்றுக்கொண்ட அவனது படைப்புக்காலம் (1904 முதல் 1921 வரை) பதினேழு ஆண்டுகள் மட்டுமே. இந்த மிகக்குறுகியகாலத்திற்குள் “சுவை புதிது; பொருள் புதிது; வளம் புதிது; சொற்புதிது; சோதிமிக்க நவகவிதை; எந்நாளும் அழியாத மாக்கவிதை’’ என இமையப் பெருமிதங்காட்டித் தமிழ்இலக்கியப் பொன்விடியலானவன், அவன். தமிழின் துறைகள்தோறும்பல்லோர் ஏத்தும் ‘படைப்புப் பலபடைத்து’ கலங்கரை விளக்காய் நின்றொளிர்ந்தவன். குறளாய்...