வேப்ப மரம் என் முகப்பு: 1919,சூன் 26 இல் வெளியிடப்பட்ட இக் கதையைத் தேடிக்கண்டு திரு. பெ. தூரன் தமது பாரதி தமிழ் நூலில் முதலில் பதிப்பித்துள்ளார். (பக் 328-335) போதி மரத்தடி புத்தருக்குப் புது ஞானம் வழங்கியது; கவிதைச் சித்தனுக்கு ஒருவேப்பமரம் நற்கனவு நல்கியதால் இங்கு நமக்கொரு பொற்கதை கிடைத்துள்ளது. கதை என்ன? தமிழ் தழைக்கப் பொதிகை வந்த குறுமுனி அகத்தியரும், நெல்லைத் தரணி தழைக்கப் பாய்ந்தோடும் தாமிரபரணியும் நீராட்டச் சங்கமம் நிகழ்த்திய களிப்பான கற்பனைக் கனவுக்காட்சி. கண்டது யார்? கவிராஜனா? இல்லை. கரைக்குச் சற்றருகே தோப்பில் நின்ற முப்பது வயது இளமரம், உடலெல்லாம் தமிழ்ச் சொற்கள் உதித்ததொரு ‘ரிஷிபோதம்’ பெற்ற, வேப்ப மரம்.! ஆம். வேப்ப மரம் கனவில் சொன்ன காட்சி விரிகிறது கதையாய் நமக்கு. வேம்பு கசக்கும், ஆனால் தமிழுதிர்க்கும் இந்த வேப்ப மரக்கதை இனிக்கும். ...
Popular posts from this blog
ஸங்கல்பமும் ஸம்பவமும் EXPECTATION AND THE EVENT அம்மணி அம்மாள் AMMANI AMMAL விவேக போதினி மார்ச் 1913 [ பக்கம் 351 முதல் 353 வரை.] (ஆவண மூலம் தேடிக் கண்டு, நகலில் இருந்து படித்துக் கணினி அச்சு செய்து தமிழ்கூறும் நல்லுலகிற்களிப்பது பேராசிரியர் இராஜ முத்திருளாண்டி. profrajamuthu@gmail.com ** ஸங்கல்பமும் ஸம்பவமும் EXPECTATION AND THE EVENT ஒரு காலத்தில் ஒரு காட்டில் ஒரு சவுக்கமரமிருந்தது. அது வெகு ஸுகமாக வளர்ந்து கொண்டிருந்தது. போதுமான அளவு மழை சூரிய வெப்பம் முதலிவற்றால் அது நன்றாய் செழித்து வளர்ந்திருந்தது. அதன் நிழலில் குழந்தைகள் விளையாடிக்கொண்டும் பாட்டுப் பாடி ஆடிக்கொண்டும் குதூஹலமா யிருந்தார்கள். பக்ஷிகள் அதன் கிளைகளில் கூடு கட்டி இனிமையாய் கூவிக் கொண்டிருந்தன. அணில்கள் அங்குமிங்கும் கிளைகளில் தாவி விளையாடிக் கொண்டு பார்ப்பவர்களுக்கு சுறுசுறுப்பை ஊட்டிக்கொண்டிருந்தன. அந்த மரத்தை சார்ந்துள்ள ஒவ்வொன்றும் ஸந்தோஷத்தோடும் சுறுசுறுப்போடு மிருந்தபோதிலும் அம...
அறியாத பாரதி! இராஜ முத்திருளாண்டி பாரதி வாழ்ந்த குறுகிய காலத்தில் (39ஆண்டுகள்) அவரைச் சரியாகவும், முழுமையாகவும் தமிழுலகில் யாரும் அறிந்து, புரிந்து, ஆதரித்துப் போற்றவில்லை என்பது கசப்பான உண்மை. தமிழகத்தின் தென்பரப்பிலுள்ள ஒரு சிற்றூரான எட்டையபுரத்திலே பிறந்து, ஆக்க நெருப்பாய்க் கிளம்பி, ‘மகாகவி’, ‘தேசியக் கவி’, ’தமிழ் நவயுகத்தின் வெள்ளி முளைப்பு’, ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சியின் மூலபுருஷர்’, ’தமிழிலக்கியத் துறைகள் தோறும் புதுமைகள் வடித்த இலக்கியச் சிற்பி’ என எண்ணற்ற சிறப்புகளுக்கு உரியவனாக விகசித்து நிற்கும் பாரதி மறைந்து (1921) நூறாண்டுகள் கழிந்துவிட்டன. “பார் மீது நான் சாகாதிருப்பேன் “ (பாரதி- அறுபத்தாறு -6) எனப் பெருமலையன்ன அசையா நம்பிக்கையுடன் தன் வரலாறு பாடிய ஒரே கவிஞன் பாரதிதான் மறைவடைய ஒரு மாதத்திற்கு முன்புகூட (ஆகஸ்ட்1921) , ஈரோடு கருங்கல்பாளையத்தில் ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்றே இறுதியாகவும் உறுதிப் பிரகடனம் செய்துவிட்டு வந்தான். ஆனால், மெல்ல வந்து 1921 செப்டம்பர் 10 நள்ளிரவு கடந்து - மரணம் அவனைக் கவர்ந்து சென்றுவிட்டது. இருப்பினும் “தமிழுக்க...
Comments
Post a Comment